Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் 45-வது வார்டு இடைதேர்தல் பிரச்சாரத்தில் மேயர் விசாலாட்சி தலைமையில் வேட்பாளர் கண்ணப்பனுக்கு ஆதரவாக அண்ணா தி.மு.கவினர் செண்டை மேளம் முழங்க வீதி, வீதியாக சென்று இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்கு சேரித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் அண்ணா தி.மு.க.சார்பில் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில், நட்சத்திர பேச்சாளர்கள் குண்டு கல்யாணம், நடிகை ஆர்த்தி, தலைமை கழக பேச்சாளர்கள் நிர்மலா பெரியசாமி, அனிதா குப்புசாமி உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரித்து வருகின்றனர். 
மேலும் இன்று காலை மேயர் அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்  செண்டை மேளம் முழங்க மங்கலம் ரோட்டில் உள்ள மாகாளியம்மன் கோவில் அருகில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாக பிரச்சாரத்தை துவக்கினர். அவர்கள் ஜம்மனை வீதி,காமாட்சியம்மன் கோவில் வீதி,காமராஜர் ரோடு, புதுமார்க்கட் வீதி குப்புசமிபுரம், தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவில் வீதி, காங்கயம் கிராஸ் ரோடு,புஷ்பாநகர், பெரியகடை வீதி, மிஷின் வீதி, நொய்யல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்றனர்.அவர்கள் சென்ற இடமெல்லாம் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்தும்ஆரத்தி எடுத்தும்  பொதுமக்கள் வரவேற்றனர். மேலும் மேயர் அ.விசாலாட்சியும், அனிதா குப்புசாமியும் காமராஜர் ரோட்டில் கடைகளில் ஜெயலலிதாவின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி ஓட்டு வேட்டையாடினர். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி, தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்புசார ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், அம்மா பேரவை நிர்வாகிகள் அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் கே.செல்வம், பிரியா சக்திவேல். மாநகர நிர்வாகிகள் பி.கே.எஸ்.சடையப்பன், பெரிச்ச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், ராஜ்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சி.எஸ்.கண்ணபிரான், டி.டி.பி.தேவராஜ், சி.டி.சி. பொன்னுசாமி, ராஜேந்திரன், ரவிகுமார், சரவணன்,சிவகுமார்,முருகன், வேலுசாமி, கேபிள் பாலு, குணசேகரன், விஸ்வநாதன் மற்றும் பி.லோகநாதன், காதர்பேட்டை பாஷா, அஹமது பைசல்,பரமராஜன், பொன்.அன்பரசன், அண்ணா ஹோட்டல் தொழிற்சங்க நிர்வாகிகள் வினோத்குமார், முபாரக், மற்றும் சாதிக் பாஷா, ராமநாதன், வாசுதேவன், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், சுந்தரம்பாள் கேசவன், இந்திராணி, மும்தாஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: