Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by farook press in ,    
கள்ளத்தொடர்பை கண்டித்தவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைதானார்கள்.
தானே மாவட்டம் பிவண்டி சாமத் நகர் பகுதியை சேர்ந்தவர் ரம்ஜான். இவரது மனைவி அசுருன்னிசா(வயது20). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு ரம்ஜான் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு கதவு தட்டும் சத்தம்கேட்டு விழித்த ரம்ஜான் எழுந்து சென்று கதவை திறந்தார்.
அப்போது, வீட்டிற்கு வெளியே 3 பேர் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ரம்ஜானை வீட்டிற்குள் தள்ளி அசுருன்னிசா கண் முன்னே தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு தாக்கினார்கள். இதில் அடி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ரம்ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் குறித்து அசுருன்னிசா பிவண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். தகவல் அறிந்ததும் பிவண்டி போலீசார் விரைந்து சென்று ரம்ஜானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அசுருன்னிசாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கணவரை, கள்ளக்காதலன் உள்பட 3 பேருடன் சேர்ந்து கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–
அசுருன்னிசாவுக்கு அவரது உறவினர் மகன் கலிம்(20) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் ரம்ஜான் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்து வந்தனர். இது சமீபத்தில் ரம்ஜானுக்கு தெரியவந்தது. இதனால் அவர் இருவரையும் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் ரம்ஜானை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.
அதன்படி சம்பவத்தன்று கலிம் தனது நண்பர்கள் பிரோஜ், ஆயுப் ஆகியோருடன் ரம்ஜான் வீட்டிற்கு சென்று அவரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தார். கணவர் தன் கண் முன்னேயே கொலை செய்யப்படுவதை அசுருன்னிசா வேடிக்கை பார்த்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தன.
இதையடுத்து அசுருன்னிசா அவரது கள்ளக்காதலன் கலிம் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தானே செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 7–ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

0 comments: