Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by farook press in ,    
திருப்பூர் வருவாய் கோட்டாசியராக பணியாற்றி வந்த பழனிகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படத்தை தொடர்ந்து  திருப்பூர் சப்-கலெக்டராக ஐ.ஏ.எஸ்.அதிகாரியான செந்தில்ராஜ் பொறுப்பேற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற, ஐ.ஏ.எஸ்., பயிற்சி முடித்ததும், முதன்முதலாக திருப்பூருக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். திருப்பூர் வந்த அவர், கலெக்டர் ஜி.கோவிந்தராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில், சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய சப்-கலெக்டர் செந்தில்ராஜை திருப்பூர் வடக்கு, தெற்கு, ஊத்துக்குளி, பல்லடம், அவிநாசி தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் கோட்டத்தில் பரம்ஜித் சிங் சித்து (1991 செப்., 30 - 1992 அக்., 5 வரை), ஹித்தேஸ் குமார் மக்வானா (1997 செப்., 1 - 1999 பிப்.,15 வரை), பங்கஜ் குமார் பன்சால் (1999 ஆக., 8 - 2000வது ஆண்டு அக்., 24 வரை) ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சப்-கலெக்டர்களாக இதுவரை பணியாற்றியுள்ளனர். கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் பிரிந்த பிறகு, மாவட்ட அளவில் முதல் சப்-கலெக்டராகவும், திருப்பூர் கோட்டத்தின் நான்காவது சப்-கலெக்டராக செந்தில்ராஜ் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: