Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by Unknown in ,    
பாகிஸ்தானில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகினர்.




பாகிஸ்தானில் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு, இதுவரை சுமார் 55 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் முக்கியமாக பஞ்சாப் மாகாணம் கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியது. அந்நாட்டில் இருக்கும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துக் காணப்படுகிறது.

மேலும் குஜ்ரன்வாலா, சியால்கோட், கசூர் ஆகிய முக்கிய பகுதிகளில் வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: