Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by Unknown in ,    




திருப்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த கணவருக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம், சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி தங்கமணி (38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி தங்கமணி நடத்தையில் தங்கராஜூக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 2013 அக்டோபர் 4-ஆம் தேதி இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தங்கமணியின் தோள்பட்டை, இடதுகையை தங்கராஜ் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த தங்கமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதன் பிறகு தங்கமணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் தங்கராஜை கைது செய்தனர். இதையடுத்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நீதிபதி வசந்தலீலா திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், தங்கமணியை கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக தங்கராஜூக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

0 comments: