Sunday, September 21, 2014
திருப்பூர் அரசு சித்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டாக ஓமியோபதி டாக்டர் இல்லாததால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு வளாகத்தில் அரசு சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகிய பிரிவுகள் உள்ளன. இதில் ஓமியோபதி பிரிவில் சிறுநீரக கல், பித்தப்பை கல், ஆஸ்துமா, மூட்டு வாதம், தோல் நோய், மூலம், வயிற்றுப்புண், காது, மூக்கு, தொண்டை பாதிப்பு, கர்ப்பப்பை மற்றும் மாதவிலக்கு பிரச்சினை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தினமும் 100–க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஓமியோபதி சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.
இங்கு ஓமியோபதி டாக்டராக இருந்த கிங், கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின், இதுவரை தனியாக டாக்டர் நியமிக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் இருந்து ஒரு டாக்டர், வாரத்தில் 2 நாட்கள் திருப்பூர் வந்து சிகிச்சை அளித்து வருகிறார். அவர் வரும் நாட்களில் மட்டுமே, நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற நாட்களில், ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ஓமியோபதி சிகிச்சை பிரிவில் உள்ள மருந்தாளுநர்கள், டாக்டர் பரிந்துரை செய்த மருந்து, மாத்திரையை மட்டும் வழங்குகின்றனர். புதிதாக ஓமியோபதி சிகிச்சை பெற வரும் நோயாளிகளை டாக்டர் உள்ள நாட்களில் வருமாறு கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இதனால் அவர்கள் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சையை பெறமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வெகுதொலைவில் இருந்து வருபவர்களுக்கு காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது.
இதுமட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வந்து செல்ல சிரமப்படுகிறார்கள். மேலும் புதிதாக வரும் நோயாளிகள், டாக்டர் வரும் நாள் தெரியாமல் இங்கு மருத்துவமனை வரை வந்து விட்டு பின்னர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே நோயாளிகளின் வீண்அலைச்சலை தவிர்க்கவும், அவர்கள் தேவையான நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கும் திருப்பூர் அரசு சித்த மருத்துவமனையில் விரைவில் ஓமியோபதி டாக்டர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
0 comments:
Post a Comment