Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மலையத்தாபாளையம் சீனிவாச நகரை சேர்ந்தவர் மாதப்பகவுண்டர் (வயது 55). பால் வியாபாரியான இவர் பொருளாதார நிலையை மேம்படுத்த கால்நடைகளை வளர்த்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டுத்தோட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்ட மிளகாய் நாற்றுகள் நன்கு மிளகாய் செடிகளாக வளர்ந்துள்ளன. இதில் ஒரு மிளகாய் செடியில் அதிசயமாக பச்சை மிளகாய்கள் மேல்நோக்கி காய்த்துள்ளன. இதுபற்றி விவசாயி மாதப்பகவுண்டர் கூறியதாவது:– பொதுவாக மிளகாய் செடிகளில் மிளகாய்கள் சிறிய பிஞ்சில் இருந்து காம்புகள் மேலேயும் கூம்பு வடிவ விதைப்பகுதிகள் கீழேயும் உள்ளது போல் காய்க்கும். ஆனால் இந்த மிளகாய் செடியில் பச்சை மிளகாயின் விதைப்பகுதிகள் மேல்நோக்கி காய்த்துள்ளன. இதற்கு முன்பு இதுவரை மிளகாய் செடிகளில் பச்சை மிளகாய்கள் மேல் நோக்கி காய்த்துள்ளதை கேள்விப்பட்டதுமில்லை, கண்டதுமில்லை. ஆனால் தற்போது எனது வீட்டில் வித்தியாசமான முறையில் அதிசயமாக பச்சை மிளகாய்கள் மேல்நோக்கி காய்த்துள்ளது. இது எங்களது குடும்பத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

0 comments: