Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by Unknown in ,    



கடந்த ஆண்டு சிரியாவில் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ். வெளியிட்டது.
 
முன்னதாக இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதாகக் கூறிய பிரிட்டன் அரசு, இன்று வீடியோ உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
 
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.எஸ்.ஐ.எஸ்.-இன் இந்தக் கொடுஞ்செயலை “முற்றுமுழுதான தீமைச் செயல்” என்று சாடியுள்ளார்.
 
மேலும் “இந்த கொடூரக் கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்த எங்கள் அதிகாரத்தினால் இயன்றவை அனைத்தும் செய்யப்படும். இதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை” என்று கூறியுள்ளார்.
 
தலைத் துண்டிக்கப்பட்ட ஹெய்ன்ஸின் குடும்பத்திற்கு அரசு தன்னால் ஆன உதவிகளையும் ஆதரவுகளையும் அளிக்கும் என்று பிரிட்டன் வெளியுறவுச் செயலகம் தெரிவித்துள்ளது.
 
அமெரிக்க பத்திரிகையாளர்களான ஜேம்ஸ் ஃபோலி மற்றும் ஸ்டீவன் சோல்டாஃப் ஆகியோரின் தலைகளைத் துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் குர்திஷ் மற்றும் லெபனான் ராணுவ வீரர்கள் தலையைத் துண்டித்த வீடியோக்களையும், சிரிய ராணுவ வீரர்களைக் கொன்று குவித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்க பத்திரிகையாளர் சோல்டாஃப் தலையைத் துண்டித்த வீடியோவின் இறுதியில் பிரிட்டன் உதவிப்பணியாளர் ஹெய்ன்சை சிறிது காண்பித்து இவரது தலையும் துண்டிக்கப்படும் என்று இஸ்லாமிக் ஸ்டேட் காண்பித்தது. ஹெய்ன்ஸ் தலையைத் துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடுஞ்செயலை அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாகக் கண்டித்துள்ளார்.
 
ஹெய்ன்ஸ் தலையைத் துண்டித்த அதே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தால் அழிவு இன்னும் அதிகமாகும் என்று எச்சரித்துள்ளார்.

0 comments: