Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சதீஸ் என்ற சதீஸ்பாண்டி (வயது 21). எலக்ட்ரீசியன். இவரும் சிவன் தியேட்டர் ரோட்டை சேர்ந்த கார்த்திக் (22), கோபால் (22) ஆகியோரும் நண்பர்கள்.
சம்பவத்தன்று நண்பர்கள் 3 பேரும் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினர். அப்போது கார்த்திக்கும் கோபாலும் நண்பர் சதீசிடம் பணம் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என்று சதீஸ் கூறினார்.
இந்நிலையில் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தத்துக்கு 3 பேரும் வந்தனர். தொடர்ந்து பணம் கேட்டு கார்த்திக்கும், கோபாலும் நச்சரித்தனர். தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று முடிவாக சதீஸ் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சதீசின் தலையில் வெட்டினர்.
வெட்டுக்காயம் அடைந்த சதீசுக்கு ரத்தம்கொட்டியது. அதிர்ச்சியடைந்த சதீஸ் சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த நண்பர்கள் 2 பேரும் ஓட்டம் பிடித்தனர்.
பொதுமக்கள் சதீசை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சதீஸ் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கார்த்திக்கும், கோபாலும் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதியின் உத்தரவையடுத்த 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து சப்–இன்ஸ் பெக்டர் சசிகலா, ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: