Wednesday, September 24, 2014
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
இடைக்கால இழப்பீட்டுத் தொகை
வழங்க
வேண்டும். மேலும்
, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க
வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் புதன்கிழமை (செப்.24) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் புதன்கிழமை (செப்.24) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடுமலைபேட்டையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி லீலாவதி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டல் தொழிலாளி சந்திரா என்ற பெண்ணை காவல்துறையினர் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக பல நாட்கள் தனியாக அடைத்து வைத்து கொடூரமாக சித்ரவதை செய்த விபரம் சென்னை உயர்நீதிமன்ற விசாரணை மூலம் வெளிவந்தது.
குறிப்பாக அவரை நிர்வாணப்படுத்தியும், பிறப்பு றுப்பில் லத்தியால் குத்தியும், தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தும், நகக்கண்களில் ஊசியை குத்தி, விரல்களைச் சிதைத்தும் சித்ரவதை செய்திருப் பதாக அவரது மகள் ராஜகுமாரி நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் விபரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான இந்த செயல், மனித உரிமை மீறல் குற்றம் ஆகும்.
இது குறித்து தமிழக அரசு தவறிழைத்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நியாயம் வழங்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தவறிழைத்த காவலர்களை தமிழக அரசு காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியிருந்தது.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சந்திரா தரப்புக்கு ஆதரவாக
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பிலும் தலையீட்டு
மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கி ழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்கள், காவல் துறையின் குற்றத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் பாதிக்கப்பட்ட
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு வரவேற்கிறது. நீதிமன்றத்தின்
சந்திராவுக்கு
ரூ. 2லட்சம் இடைக்கால
இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இத்துடன் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு வரவேற்கிறது. நீதிமன்றத்தின்
இந்த உத்தரவை ஏற்று பாதிக்கப்பட்ட சந்திராவுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த தொகையை
மாநில அரசு வழங்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment