Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
திருப்பூர் காந்திநகர் ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 28). டைல்ஸ் மேஸ்திரி. இவருக்கும் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியன்– சரோஜா தம்பதியின் மகள் நந்தினிக்கும் (23) கடந்த 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சிந்தனா (5) என்ற பெண் குழந்தை உள்ளார். 
இந்நிலையில் பால கிருஷ்ணனின் நண்பர் ராஜேந்திரன் (28) என்பவரும் கட்டிடவேலைக்கு சென்றார். நண்பர் ராஜேந்திரனை வீட்டுக்கு அடிக்கடி பாலகிருஷ்ணன் அழைத்து வந்தார். இதனால் நந்தினிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
தனது மனைவி நண்பருடன் சிரித்து பேசுவதை கண்டு பாலகிருஷ்ணன் சந்தேக மடைந்தார். இதனால் நந்தினியை அடித்து துன்புறுத்தினார். இதில் கோபமடைந்த நந்தினி கடந்த 4 மாதத்துக்கு முன் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். பெரியோர்கள் சமரசம் செய்துவைத்து நந்தினியை கணவருடன் அனுப்பி வைத்தனர். சிறிது நாட்களே அமைதியாக சென்ற வாழ்க்கையில் மீண்டும் சந்தேகம் கிளம்பியது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தினி நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி தூக்கில் தொங்கியபோது வீட்டில் உள்ளவர்கள் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நந்தினியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நந்தினியின் பெற்றோர் திருப்பூர் விரைந்தனர். நந்தினியின் தாய் சரோஜா அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: