Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
கோவை, செப். 24–
கோவையை அடுத்த திருமலையாம் பாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லட்சுமணன் உள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வங்கியை அலுவலர்கள் பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் இரவு வங்கியின் காம்பவுண்டு சுவரை தாண்டி 2 கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்தனர்.
அவர்கள் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்தனர். அப்போது ஜன்னலில் இருந்த கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. இந்த சத்தம் கேட்டு வங்கியின் இரவு காவலாளி கோபால் வங்கிக்கு பின்புறம் சென்று பார்த்தார்.
காவலாளியை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து காவலாளி கோபால் வங்கி மேலாளர் லட்சுமணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொள்ளை சம்பவம் குறித்து க.க.சாவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வங்கியில் பொருத்தியிருந்த கேமிராவை ஆய்வு செய்து பார்த்த போது அதில் கொள்ளை முயற்சி சம்பவம் பதிவாகியிருந்தது. அதில் இருந்த 2 பேரின் புகைப்படத்தை எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: