Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பூருக்கு பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை பழனியை சேர்ந்த டிரைவர் தங்கவேல் (வயது 50) ஓட்டி வந்தார்.
காங்கயம் அருகே கொடுவாய் வழியாக பஸ் வந்தபோது கொல்லி வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் பஸ்சும், திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பழனியை சேர்ந்த ராமலட்சுமி (72) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர் புதுப்பட்டியை சேர்ந்த காளியப்பன் (42), பஸ் டிரைவர் தங்கவேல் (52) உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்ததும் அவினாசி பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக தங்கவேல் உள்பட 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் வீடு திரும்பினர்.

0 comments: