Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by farook press in ,    
திருப்பூரில் பெண் போலீஸ் ஏட்டுவுடன் பார் உரிமையாளர் ஓட்டம் பிடித்தார். தனது கணவரை மீட்டு தரக்கோரி பார் உரிமையாளரின் மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பெண் போலீஸ் ஏட்டு
திருப்பூர் போலீஸ் லைன் முதல் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 40). இவர் திருப்பூரில் சொந்தமாக ‘பாலிபேக்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமாலா(37). இவர் கே.வி.ஆர். நகரில் உள்ள மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மேகா(11) என்ற மகளும், சந்தோஷ்குமார்(9) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மணிமாலா மீது லஞ்சப்புகார் எழுந்ததால், மாநகர போலீஸ் ஆணையர் சேஷசாய் சமீபத்தில் அவரை திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் தேர்தல் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக மணிமாலா தேர்தல் பிரிவில் பணியாற்றி வந்தார்.
பெண் போலீஸ் ஏட்டு மாயம்
போலீஸ் ஏட்டு மணிமாலாவுக்கும், திருப்பூர் ஆலங்காடு பகுதியில் பார் நடத்தி வரும் திருப்பூர் ஜீவாநகரை சேர்ந்த சக்திவேல்(41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சக்திவேலுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 21 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 11–ந் தேதி காலை மணிமாலா, தனது மொபட், செல்போன்கள் ஆகியவற்றை வீட்டிலேயே போட்டு விட்டு நகை மற்றும் துணிகளை எடுத்துக்கொண்டு, மாயமானார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் மணிமாலாவின் கணவர் மனோஜ்குமார் ‘‘எனது மனைவியை காணவில்லை. அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். காணாமல் போன தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்’’ என்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாலாவை தேடி வந்தனர்.
பார் உரிமையாளர் ஓட்டம்
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு வந்த பார் உரிமையாளர் சக்திவேலின் மனைவி ஜெயந்தி, தனது கணவரை கடந்த 11–ந் தேதி காலை முதல் காணவில்லை. அவருடைய ஸ்கூட்டர், கார் மற்றும் செல்போன்கள் வீட்டிலேயே உள்ளன. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் செய்தார்.
இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் பார் உரிமையாளருடன் பெண் போலீஸ் ஏட்டு மாயமானது உறுதியாகியுள்ளது. மேலும், தங்கள் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதால், இருவரும் தங்கள் செல்போன்கள் மற்றும் வாகனங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று இருப்பதால், போலீசாருக்கு துப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் இருவரின் வங்கி கணக்குகளையும் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.

0 comments: