Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
வால்பாறை, செப்.13–
கோவை மாவட்டம் வால்பாறை டேன்டீ எஸ்டேட்டில் சின்கோனா 2–வது குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் கொண்ட கூட்டம் சுற்றி திரிந்து வருகின்றன.
பகலில் வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள் இரவில் குடியிருப்பு பகுதிகள் உலா வந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தியும், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்றும் சேதப்படுத்தி வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தாய் யானை ஒன்று தனது குட்டியுடன் வனப் பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றன. அப்போது தாய் யானை கால் தவறி குடியிருப்பு பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கும் தொட்டிக்குள் விழுந்தது.
இதையடுத்து யானை கடுமையாக பிளிறியது. யானையின் அலறல் சத்தம் கேட்டு அந்த குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் தொட்டியை சுற்றி நின்று கொண்டிருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் விரைந்து வந்த வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால் காட்டு யானைகள் ஆக்கிரஷோமாக இருந்ததால் மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை.
இதையடுத்து இன்று காலை மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். தண்ணீர் தொட்டிக்குள் ரப்பர் தூள்கள், மரக்கட்டைகள் மற்றும் மண் மூட்டைகளை போட்டு யானையை மேலே கொண்ட வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

0 comments: