Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம்
திருப்பூர்

அன்புடையீர்வணக்கம்.


            பொருள்பண்டிகை கால சிறப்புப் பேருந்துகளைஇயக்குதல் – உரிய கட்டணம் வசூலிப்பதை உத்தரவாதப்படுத்த –கோருதல் – தொடர்பாக

தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பண்டிகைகளின் போது திருப்பூர் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான வெளிமாவட்டங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வர வேண்டியுள்ளதால்சிறப்பு பேருந்துகள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இதிலும் சாதாரண பேருந்து கட்டணங்களை வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதலான முறையில் கட்டணக் கொள்ளையடிக்காமல் உரிய முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 
இதுதவிர திருப்பூரிலிருந்து கோவை செல்ல அவிநாசி,பல்லடம் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில்அவிநாசி வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அவிநாசிக்குச் செல்லும் பயணிகளை பெரும்பாலும் ஏற்றுவதில்லை. லாப நோக்கோடுகோவை செல்லும் பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டுஇதர பயணிகளை வயதானவர்களாக இருந்தாலும்கூடஇடையிலேயே நிறுத்தி இறக்கி விட்டு செல்லும் அவலமும் நடைபெறுகிறது.

எனவே இது போன்ற செயல்களையும் தடுத்து நிறுத்தி பொதுப் பயன்பாட்டிற்கான சேவைப்பிரிவில் இயங்கும் போக்குவரத்தை, லாப நோக்கோடு மட்டும் பார்க்கும் தனியார் பேருந்து நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட மக்கள் நலன் சார்ந்த இந்த பிரச்சனைகளின் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்திருப்பூர் மாவட்டக்குழு சார்பில்கேட்டுக் கொள்கிறோம்.

0 comments: