Thursday, September 11, 2014
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் ஜோதிநகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்தோஷ்(வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 மாத காலமாக சந்தோஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் தலைவலி குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சந்தோசின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தோஷ் தற்கொலை செய்யும் முன்பு வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் அப்பா என்னை மன்னித்து விடுங்கள். இந்த உலகத்தை விட்டு நான் செல்கிறேன். என்னால் தலைவலியை தாங்க முடியவில்லை. வெளியே சொல்லவும் முடியவில்லை. எந்த சிகிச்சை பெற்றாலும் எனக்கு வந்துள்ள தலைவலி குணமாக வாய்ப்பில்லை. எனவே என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சந்தோசின் உடலைப் பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment