Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்படும், காமராஜர் பல்கலைக் கழகத்தின் உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி ஆகியோர் மீது நேற்று மாலை ஒரு வாலிபர் திராவகம் வீசினார்.
இதில் காயம் அடைந்த அவர்கள், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், திருமங்கலத்தில் உள்ள இரும்புக்கடைகள், பெயிண்ட் கடைகள் போன்றவற்றில் இன்று வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர்.
தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் மற்றும் ஊழியர்கள் இந்த சோதனையை நடத்தினர். அனுமதியின்றி திராவகம் விற்கப்படுகிறதா? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் அதனை கேட்டு வருபவர்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து அதன்பிறகு விற்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

0 comments: