Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
மதுரை சின்ன சொக்கி குளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பூங்கொடி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோர் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உடல் கொடைக்கானல் மலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க கோர்ட்டுகளில் சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பேரில் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இன்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிகிறது. கொலைக்கான முக்கிய தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு ஜமால் முகமது கொலையில் தொடர்பு என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: