Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
வடவள்ளி, செப்.13–
கோவை செல்வபுரத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் செல்லும் சாலையில் புட்டுவிக்கி பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் நொய்யலாற்றின் இடையே தரைப்பாலமாக இருந்து வந்தது. இப்பாலத்தை டவுன்ஹால், உக்கடம் செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன் படுத்தி வந்தனர்.
இந்த பகுதிகளில் மழைக் காலங்களில் பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதன் காரணமாக பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கோவைப் புதூர், சுண்டக்காமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் சுற்றுப்பாதை வழியாக சுமார் 29 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நகரை அடைந்து வந்தனர். இதற்கு தீர்வு கோரி அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டது. இதனை தொடர்ந்து ரூ.15 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 70 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட பெரிய மேல்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
சிமெண்டு கான் கிரீட்டிலான 5 தூண்களுடன் பிரமாண்டமாக பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உக்கடத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் வரையிலான இணைப்பு சாலையை 7 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரி கூறும்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தேர்தல் முடிவடைந்த பின்னர் பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்றார்.

0 comments: