Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்குவதற்கான இயந்திரங்கள், திருப்பூர் மாவட்டத்துக்கு வந்துள்ளன.
அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இப்பணிக்காக, தமிழகம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.மாவட்ட அளவில் ஒரு இடத்தில், கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட இயந்திரங்களுடன், வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு இதற்கான 'பிரின்டர்' தருவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வரும் அக்., மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, நவ., 30 வரை, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் என சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும். 2015 ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.சுருக்க முறை திருத்தத்தின் மூலம் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். 'ஸ்மார்ட்' கார்டு போன்ற அடையாள அட்டை அச்சிடப்பட்டு, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25 முதல் வினியோகிக்கப்படும்.

வண்ண அடையாள அட்டை வழங்குவது குறித்த அறிவிப்பு, அடுத்த மாத இறுதியில் வெளியாகலாம். அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தாலுகா அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில், 25 ரூபாய் செலுத்தி புதிய அட்டை பெறலாம். அறிவிப்பு வரும் வரை, கருப்பு வெள்ளை அடையாள அட்டை மட்டும் வழங்கப்படும். முறையான அறிவிப்பு வந்த பிறகு, சிறப்பு முகாம் நடத்தி, அனைவருக்கும் வண்ண அட்டை வழங்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்

0 comments: