Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரையில் நடந்த மாவட்ட கூடைப்பந்து போட்டியில் தேம்பாவனி அணிக்கு முதல் பரிசு
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் 13 அணிகள் மோதின. இந்த போட்டிகளை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலை வர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தொடங்கி வைத்தார்.
கூடைப்பந்தாட்ட இறுதி போட்டியில் தேம்பாவனி அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. பசுமலை பிகாசஸ் அணிக்கு 2–ம் பரிசும், மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணிக்கு 3–ம் இடமும், கோபாலன் மெமரி அணிக்கு 4–ம் இடமும் கிடைத்தன.
வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை மதுரை மாநகராட்சி கமிஷனர் கதிரவன், கூடைப்பந்து கழக தலைவர் ராஜ்சத்யன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் தேவதாஸ், மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், கூடைப்பந்தாட்ட கழக மாவட்ட நிர்வாகிகள் வசந்தவேல், பேட்ரிக், ஒருங்கிணைப்பாளர்கள் செல்லப்பா, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: