Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூரில்
 மனவளர்ச்சி குன்றிய வாய்பேச முடியாத இளம்பெண்ணை நள்ளிரவில் வீட்டுக்குள் அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து, அதே பகுதியில் வசித்து வருபவர் 30 வயது இளம் பெண். இவர், சற்று மனவளர்ச்சி சரியில்லாமலும், வாய்பேச முடியாமலும் இருந்ததாக தெரிகிறது. அதனால் திருமணமாகாமல் இருந்துள்ளார். இவர், குடியிருக்கும் அதே காம்பவுண்டில் உள்ள எதிர் வீட்டில் வசித்து வருபவர் சலீம் (38). இவர், அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் அயர்னிங் கான்டிராக்டராக வேலை பார்க்கிறார். சலீமிற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சலீமின் மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டு விசேஷசத்திற்காக சிவகாசி சென்றுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு அந்த இளம்பெண்ணை, சலீம் கட்டாயப்படுத்தி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலை அந்த இளம்பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையை விட்டு எழாமல் மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, அவரிடம் விசாரித்த போது சலீம் வீட்டில் நடந்ததை கூறி அழுதுள்ளார். அதனை தொடர்ந்து, இளம்பெண்ணின் தாயார் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சலீம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பாதிப்புக்குள்ளான இளம்பெண் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

0 comments: