Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by farook press in ,    
தமிழகத்தில் உள்ள 32 முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்–இந்து அமைப்புகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணித்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் முக்கிய தீவிரவாதியான வைகறை சாகுல் (27) துடியலூர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இந்து மத தலைவர்களை கொல்ல திட்டமிடுவதற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதற்கான புதிய அமைப்பில் உள்ள தீவிரவாதிகள் ஸ்பி லண்டர் செல்ஸ் எனப்படும் சிமி இயக்கத்தின் முன்னாள் மாணவர் அமைப்பினர் என தெரியவந்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பு கடந்த செப்டம்பர் 2001–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த அமைப்பில் இணைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் தீவிரவாத செயல்கள் செய்ய திட்ட மிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை கண்காணிக்க தொடங்கியுள்ளோம். இது தவிர கடந்த 1998 ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பின் பழைய குற்றவாளிகள் 150 பேரும் எங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர் களது செயல்பாடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இத்துடன் இந்து அமைப்புகளும் கண்காணிக்கப்படுகிறது. இந்து–முஸ்லிம் மோதலை தடுக்கவே இந்த அமைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகள் மக்களுடன் மக்களாக இணைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களது தீவிரவாத அமைப்பில் இருந்து விலகி தனித்து இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் அமைப்பில் உள்ள சக நபர் யார் என்பது கூட தெரியாது. தலைவரின் கட்டுப்பாட்டுக்கு இணங்க செயல்படுகிறார்கள். அவர்களையும் கண்டறியும் பணி மாநிலம் முழுவதும் நடை பெற்று வருகிறது.
சமீபத்திய கண்காணிப்பில் தற்போது பிரபலமடைந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்டு சிரியா தீவிரவாத அமைப்பில் இந்திய முஸ்லிம் இளைஞர்களை சேர்க்க மாநிலம் முழுவதும் ரகசியமாக மூளைச்சலவை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அதிர்ச்சி தரும் விதமாக முஸ்லிம் இளைஞர்களை சிலிப்பர் செல்ஸ் எனப்படும் தற்கொலை தீவிரவாத படைக்கு ஆட்களை தேர்வு செய்யவும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இதை தடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி புதிய தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளவர்களை தீவிரவாத அமைப்பினர் உளவு அமைப்பினராக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள 32 முஸ்லிம் மற்றும் இந்து அமைப்புகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

0 comments: