Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by Unknown in ,    


 


சென்னை: ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய  மழை பெய்யும்’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு  சில இடங்களில் நேற்று காலை, மழை பெய்தது. நேற்று பெரும்பாலும்  மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், நேற்று காலை  குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதேபோல தமிழகத்தின்  பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இன்றும் மழை பெய்யக்கூடும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வெப்ப சலனம்  காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை  பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது  இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் கலவை,  திண்டிவனம், காவேரிபாக்கத்தில் தலா 6 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.  ஆரணி, திருபுவனம், திருவண்ணாமலை, சோழிங்கநல்லூர், மதுரை  விமான நிலையத்தில் தலா 4 செ.மீ, ஸ்ரீபெரும்புதூர், போளூர்,  புதுக்கோட்டை, ஆம்பூர், திருவேலங்காடு, உத்திரமேரூர், செய்யாறு,  ஆர்.கே.பேட்டையில் தலா 3 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 comments: