Monday, September 22, 2014

On Monday, September 22, 2014 by Unknown in ,    


 
நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, திருவல்லிகேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் தூண்டித்துவிட்டார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், உடனடியாக சென்னை பெருநகர காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவுப்படி, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் திருவான்மியூரில் உள்ள அஜித் வீட்டில் நள்ளிரவு சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் அங்கு எந்த வெடி பொருளும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: