Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    
அனுப்பர்பாளையம், :கருவலூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. 
அவிநாசி அருகே கருவலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் முதலாம் கால வேள்வி பூஜைகளுடன் துவங்கி நேற்று வரை தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. காலையில் ராஜகோபுரம், மூலவர் விமானம், மாரியம்மன் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தசதானம், தசதரிசனம், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது. 
விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் நடராஜ சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் அர்ச்சுணன், பரம்பரை அறங்காவலர்கள் தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன், கருவலூர் ஊராட்சி மன்ற தலைவர் அவிநாசியப்பன், கருப்புசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

0 comments: