Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown   

கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார். ஆனால் ஒப்பந்ததை காட்டி எங்களை கழற்றி விட முடியாது என சுபாஸ்கரன் தரப்பில் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக முதல்வரை நேரில் சந்தித்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என விஜய் நினைத்தார். ஆனால் தமிழக முதல்வர் தரப்பிலிருந்து, விஜய்க்கு தொடர்ந்து ரெட் சிக்னல் விழுந்துள்ளது.

வேறு வழியே இல்லை கத்தி படத்தின் பணிகளை நிறுத்திவிடலாம் என விஜய், முருகதாசிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லைக்காவின் சுபாஸ்கரன், ‘உங்கள் மனைவியின் தந்தை லண்டனில் தான் வசிக்கின்றார் உங்களுக்கு நினைவில்லையா’ எனக் கூறியுள்ளார். லண்டனில் ஆளும் கட்சிக்கு அதிக அளவில் நிதி வழங்கியதால் அங்கு செல்வாக்கு மிகுந்தவராக காணப்படுகின்றார் சுபாஸ்கரன். எனவே சுபாஷ்கரனை எதிர்த்து விஜய்யால் லண்டனின் ஒன்றும் செய்யமுடியாது. எனவே, விஜய்யின் மாமனார் சொர்ணலிங்கம் லைக்காவின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார்.

இந்த செய்தியை அறிந்த விஜய்யின் மனைவி கவலையில் உள்ளார். தெரிந்தோ, தெரியாமலோ ராஜபக்சேவின் வலையில் சிக்கிவிட்டார் விஜய். அவர்களுக்கு சாதகமாக நடக்கும் பட்சத்தில் தமிழர்களின் விரோதியாக மாறிவிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே ஈழம், ஈழம் என கூவிவந்த சைமன் ராஜபக்சேவின் கூட்டாளியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



0 comments: