Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by Unknown in ,    
மதுரை அருகே காதல் தகராறில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் பரசுராம்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் சிவரஞ்சன் (வயது28). ஐ.டி.ஐ. படித்துள்ளார். தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் நிலம் வாங்கி விற்பனை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதூர் ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், இவருக்கும் காதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பெண் வீட்டாருடன் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் காஞ்சரம்பேட்டை அருகில் உள்ள சின்னப்பட்டி–வெளிச்ச நத்தம் ரோட்டில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சிவரஞ்சன் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாக நேற்று கிடந்துள்ளார். அவரை யாரோ ‘மர்ம’ மனிதர்கள் வெட்டி படுகொலை செய்து உடலை வீசி சென்று உள்ளனர்.

இதுதொடர்பாக சிவரஞ்சனின் தாய் சரஸ்வதி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். காதல் தகராறில் தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பாக ஆத்திக்குளத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ், அவரது சகோதரி மகன் ஜீவா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிவரஞ்சனிடம் செல்போன் மூலம் ஜீவா பேசி உள்ளார். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக சமரசம் செய்ய வரும்படி கூறினாராம். அதன் பிறகு சிவரஞ்சனை அழைத்து சென்ற ஜீவா மற்றும் சிலர் அவருக்கு மது கொடுத்து மயக்கி உள்ளனர்.

பின்னர் அவரை வெட்டி கொலை செய்து தென்னந்தோப்பில் வீசி உள்ளனர். இந்த கொலையில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ் நேரடியாக ஈடுபட்டுள்ளாரா? அல்லது கூலிப்படை வைத்து கொலை நடந்ததா? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 comments: