Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    



திருப்பூர், : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை முதல்வராகவும், துறை தலைவராகவும் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியதாக அக்கல்லூரி மாணவ, மாணவியர் நேற்று முன்தினம் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் துணை முதல்வராகவும், வணிகவியல் துறை தலைவராகவும் இருப்பவர் கல்லூரியின் உடை மாற்றும் அறையில் எடுத்த  மாணவிகள் சிலரின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியதாக, நேற்று முன்தினம் மாணவ, மாணவியர் ஏராளமானோர் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கல்லூரி முன்பு அமர்ந்து மூன்று மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி மற்றும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து கல்லூரிக்கு வந்த காங்கயம் டி.எஸ்.பி., சுருளிராஜா, ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் செல்வதங்கம், எஸ்.ஐ., வருணியா மற்றும் கல்லூரி முதல்வர் சுப்ரமணியம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட வணிகவியல் துறை தலைவரை மாற்றுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், ஆபாச வீடியோ விவகாரம் குறித்து விசாரித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியர்கள் தர்ணா போராட்டத்தை கைவி ட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர், கல்லூரி முதல்வர் சுப்ரமணி இதுகுறித்து கூறுகையில், வணிகவியல் துறை தலைவர் மீது கூறப்பட்டுள்ள இந்த புகார் உண்மையல்ல, அவர் மிகவும் கண்டிப்பாக நடத்து கொள் வதால் சிலர், அவர் மீது தவறான புகாரை தெரிவித்துள்ளனர் என்றார்.

0 comments: