Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    





திருப்பூர், : திருப்பூர் காலேஜ்ரோடு சாதிக்பாஷா நகர் பிரிவில் ஏற்படும் விபத்துகளை தடுக்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
திருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாஷா நகர் பிரிவில் நேற்று மாலை ராயபுரத்தை சேர்ந்த மணி (27) என்பவரும், சாதிக்பாஷா நகரை சேர்ந்த மனிஷ் (21) என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சாதிக்பாஷா நகர் பிரிவில் அதிக விபத்துநடப்பதாகவும், கல்லூரி, பள்ளிகள் உள்ள இந்த ரோட்டில் மினி பஸ்கள், லாரிகள், வேன்என அனைத்தும் வாகனங்களும் அதிவேகமாக செல்வதால்  இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதற்கு உடனடியாக தீர்வு காண இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இப்பகுதியில் வேகத்தடை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 
இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 comments: