Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
இந்தியாவில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக சுமார் ரூ 2 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐந்து நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவை இன்று தலைநகர் டோக்கியோவில் சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பலனாக, இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்ட கூட்டத்தில், இந்தியாவில் நவீன நகரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் டாலரை, அதாவது இந்திய மதிப்பில் ரூ 2.01,480 கோடி முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முதலீடு பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்ததாக இருக்கும்.
இந்தியாவில் அதிவேக ஷின்கான்சென் ரயில் முறையை அறிமுகம் செய்ய நிதி, தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு ஆதரவு அளிக்கப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் இந்தியாவில் படிப்புக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை இருநாடுகளும், கணிசமாக உயர்த்த உள்ளது. இந்தியாவில் ஜப்பான் மொழி கல்வி மேம்படுத்தப்படும். உலக அளவில் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களை அழிக்க இந்திய-ஜப்பான் உறுதி ஏற்றுள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

0 comments: