Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சனும் நடித்துள்ளனர். இப்படத்திற்காக தனது எடையைக் குறைத்தும், கூட்டியும் நடித்துள்ளார் நடிகர் விக்ரம். ஏற்கனவே, இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், சுமார் 50 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய டீசர் பத்திரிக்கையாளர்களுக்கு என்று பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது. அதில், உடல் முழுவதும் ரோமங்களுடன், பெரிய பற்கள் மற்றும் கொம்புகளுடன் ஓநாய் போன்ற உருவத்தில் தோன்றுகிறார் விக்ரம்.
தவறான பாதையில் செல்லும் விளையாட்டு வீரனை குறித்து அறிவியல் பரிசோதனை செய்யும் கதைக்களம் தான் ‘ஐ’ எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம் அழகான வாலிபனாக மற்றும் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் உடற்கட்டு கொண்டவராக காட்சி தருகிறார் என தகவல்கள் வெளியாயின.
இப்படத்திற்காக விக்ரம் மணிக்கணக்கில் உடற்பயிற்சிக் கூடத்தில் கிடந்து உடல் எடையைக் கூட்டியும் குறைத்தும் விழாக்களில் அவ்வப்போது தலைகாட்டினார். ஆனால், விக்ரமின் அந்த தோற்றத்தில் உள்ள காட்சிகள் இல்லாமல் அவர் ஒழுங்கற்ற வகையில், அடையாளம் காண முடியாத முகம் மற்றும் விலங்குகளை போன்ற கால்களுடனும் காட்சி தரும் காட்சிகள் டீசரில் வெளியிடப்பட்டது.
இந்த டீசருக்காக டம்மியான இசை பின்னணியில் ஒலிக்க செய்யப்பட்டது. படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்கள் இப்படத்தில் ஹாலிவுட்டில் ஹிட் ஆன ஹல்க் படத்தின் சாயல் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என கருத்து பரிமாறிக் கொண்டனர்

0 comments: