Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
கௌதம் மேனன் இயக்கத்தில் முதன் முதலாக அஜித் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் அடிபட்டன.
இணைய தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் இப்படியொரு செய்தி வெளியானதை நம்பி அஜித்தின் ரசிகர்கள் மிக ஆவலாய் காத்திருந்தனர். குறிப்பிட்ட தினத்தில் தல 55 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாததினால், அஜித் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.
அதிகாரபூர்வமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை என்றாலும், அஜித் நடிக்கும் புதிய படத்தின் சில புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிவிட்டன. அதில் படு ஸ்டைலாக காட்சியளிக்கும் அஜித்தின் தோற்றம் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.
அது சரி…தல 55 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏன் வெளியிடப்படவில்லையாம்? லேட்டஸ்ட் தகவலின்படி அஜித் படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரையும் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.
அப்படீன்னா படம் எப்போது ரிலீஸ்? இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த வீரம் படம் ரிலீசானது. அதேபோல வருகிற பொங்கலுக்கு அஜித் நடித்து வரும் புதிய படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

0 comments: