Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by farook press in ,    
காஞ்சனா‘ வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி. இயக்கி. நாயகனாக நடிக்கும் ‘முனி-3 கங்கா’ படத்தின் பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதில் கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு மாதம் எடுத்துக்கொண்டு படத்தை டிசம்பர் மாதம் வெளியிடவுள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூறும்போது, இடையில் சிலமாதங்கள் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால்தான் இந்த காலதாமதம். ‘காஞ்சனா’ போலவே இதுவும் வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாகி உள்ளது. நிறைய செலவு செய்து படத்தை உருவாக்கி வருகிறோம் என்றார்.

0 comments: