Wednesday, September 03, 2014
விஜய்- சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
விஜய் தனது முந்தைய படங்களில் ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக கொண்டு வந்தார். அந்த வரிசையில், இந்த படத்திலும் விஜய் பாடப்போவதாக தகவல் வந்தது. அதன்படி கத்தி படத்துக்காக அனிருத் இசையில் ‘செல்பிபுள்ள…’ என்று தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளார்.
சமீபகாலமாக விஜய் பாடும் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறது. ‘துப்பாக்கி’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் இவர் இணைந்து பாடிய, ‘கூகுள் கூகுள்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து, தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’, ஜில்லா படத்தில் ‘கண்டாங்கி கண்டாங்கி’ ஆகிய பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்தன. அந்த வரிசையில் கத்தி படத்தில் விஜய் பாடிய ‘செல்பி புள்ள’ பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என நம்பலாம்.
இப்படத்தை தயாரித்திருக்கும் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது. எனவே இப்படத்திற்கு எதிராக மாணவ அமைப்புகள் மற்று பல்வேறு தமிழ் அமைப்புகள் போராடி வருகின்றன.எனவே கத்தி படம் திரைக்கு வருவது சந்தேகமே.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
.jpg)
0 comments:
Post a Comment