Thursday, September 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
மாநகராட்சி வார்டுகள்
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் புடைசூழ யுனிவர்சல் தியேட்டர் சாலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தார். அங்கு 22வது வார்டுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாநகரக்குழு உறுப்பினர் ஈ.பி.ஜெயகிருஷ்ணன், தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜூ என்கிற சென்னியப்பன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் என்.சண்முகம், சி.மாரப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல் 45வது வார்டில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.என்.நாகராஜன் அந்த வார்டு தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தமிழ்ச்செல்வனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு வட்டாரக்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, மாணிக்கம், இளைஞர் பெருமன்ற வட்டார தலைவர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கட்சி நகரக்குழு உறுப்பினர் யு.நாசர், கிளைச் செயலாளர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நகராட்சி வார்டு
பல்லடம் நகராட்சி 6வது வார்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எஸ்.சாந்தாமணி வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ப.கு.சத்தியமூர்த்தி, கமிட்டி உறுப்பினர்கள் பரமசிவம், ஆஸாத், கணேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தசாமி, சுப்பிரமணியம் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி தலைவர் பதவி
மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.எம்.வீரப்பன் வியா ழக்கிழமை காலை 11.30 மணி அளவில் பேரூராட்சிஅலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அப்போது அவருடன் தாலுகா செயலாளர் வெ.ரங்கநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சசிகலா, வாலிபர் சங்க நிர்வாகி வடிவேல், பன்னீர்செல் வம்,ராஜரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியின்போது கலந்து கொண்டனர்.
திருமுருகன்பூண்டி பேரூராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.ராமசாமி பூண்டி பேரூராட்சிமன்றத் தேர்தல் அலுவலர் நந்தகோபாலிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் பி.முத்துசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஒன்றிய கவுன்சிலர்கள்
உடுமலை ஊராட்சி ஒன்றிய 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஏ.பழனிச்சாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பஞ்சலிங்கம் மற்றும் முத்துசாமி, கிருஷ்ணசாமி உள்பட செல்லப்பம்பாளையம் கிளை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் 16வது வார்டுக்கு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஆர்.செந்தில்பிரபு அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையர் து.இராஜகோபாலனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மோகன், புதுப்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் முருகன், சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
பேரூராட்சி கவுன்சிலர்
தளி பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.குமரேசபாண்டியன், பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், சாந்திபிரியா, ஜெகதீசன், கிளைச் செயலாளர் கருப்பசாமி, 14வது வார்டு உறுப்பினர் மகாலட்சுமி, பொன்னாலம்மன் கோயில் ஆனந்தன் மற்றும் திருமூர்த்தி மலை கிளை ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
ஊராட்சித் தலைவர் பதவி
உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.செல்வராஜ் வியாழனன்று உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், மாவட்டக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணசாமி, ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், நகரச் செயலாளர் தண்டபாணி, கமிட்டி உறுப்பினர்கள் செல்வராஜ், முத்துசாமி, விஸ்வநாதன், சுதா சுப்பிரமணியம், வசந்தி, வசந்தாமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சித்ரா ரணதேவ், முத்துக்குமார் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...


0 comments:
Post a Comment