Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by Unknown in ,    



நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு
மீண்டும் ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என்றும், கமலுடன் நடிக்க விரும்புகிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகினரைப் பொறுத்தவரை, ட்விட்டர் பக்கத்தில் எப்போதுமே தீவிரமாக இயங்குபவர் குஷ்பு. தன்னைப் பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும், உடனுக்குடன் பதில் தருவது, கருத்துக்கள் தெரிவிப்பது என தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்.
ட்விட்டரில் தன்னைப் பின் தொடரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு சனிக்கிழமை பதிலளித்தார். 'ரஜினியுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தால்?' என்ற கேள்விக்கு 'மாட்டேன்' என்றும், 'கமலுடன் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தால்' என்ற கேள்விக்கு 'ம்ம்ம்ம்ம்ம்ம்...' என்று பதிலளித்து இருக்கிறார்.
மேலும் அவரது சில பதில்களின் தொகுப்பு:
"தற்போதைக்கு மீண்டும் அரசியலில் நுழையும் திட்டமில்லை.
என்னுடைய பார்வையில், இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் தவறான பாதையில் செல்கிறார்கள்.
கார்த்திக் நடித்ததில் மெளன ராகம் மற்றும் அக்னி நட்சத்திரம் ஆகியவை மிகவும் பிடித்த படங்கள்.
சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'மதகஜராஜா' திரைப்படம் வெளிவருவதற்கான அறிகுறிகள் இல்லை."
இவ்வாறு குஷ்பு வெவ்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

0 comments: