Sunday, September 21, 2014
ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி. படம்: ராய்ட்டர்ஸ்
இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈரானுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியா, இராக்கில் கணிசமான பகுதிகளை இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படை கைப்பற்றியுள்ளது. இரு நாடுகளின் அரசுகளால் அந்த அமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இராக் தலைநகர் பாக்தாதை நோக்கி கிளர்ச்சிப் படை முன்னேறிய நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அண்மையில் போரில் குதித்தன.
ஈரானுடன் மறைமுக பேச்சு
மேலும் வளைகுடா பகுதியைச் சேர்ந்த சுமார் 40 நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் பரம எதிரியான ஈரானுடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படு கிறது.
இதுகுறித்து ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி கொமேனி அண்மையில் நிருபர்களிடம் பேசியபோது, ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் தங்களுடன் இணையுமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டது, அதனை நிராகரித்துவிட்டோம் என்று தெரிவித்தார்.
ஜான் கெர்ரி அழைப்பு
ஈரானுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா தயங்கி வருகிறது. கடந்த வாரம் ஜெட்டாவில் நடைபெற்ற வளைகுடா நாடுகளின் ஆலோ சனைக் கூட்டத்தில் ஈரானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்படவில்லை.
இந்தப் பின்னணியில் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேசியபோது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈரான் உட்பட ஒவ்வொரு நாடுகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ஈரானுக்கு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தி ருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஆதரவு
சிரியா, இராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த வகையில் ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போருக்கு ஈரானும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment