Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    
திருப்பூர், : இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவி தொகை பெற வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கல்வியில் சிறந்து விளங்கி, வசதியின்றி மேல்படிப்பை தொடர முடியாத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவியர்களுக்கு உதவிடும் வகையில், மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவி தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த 2014-15ம் கல்வியாண்டில் பிளஸ் 1 படிக்கும் மாணவியர்களுக்கு மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12,000 கல்வி உதவி தொகை இரு தவணைகளாக வழங்கப்படுகிறது. (பிளஸ் 1 வகுப்புக்கு ரூ.6000, பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.6000) இவை கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருள் உள்ளிட்டவைகளுக்காக வழங்கப்படுகிறது. 
கல்வி உதவி தொகை பெற, சிறுபான்மையின மாணவிகள் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்று, நடப்பாண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 1 வகுப்பு படிப்பவராக இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் போது சேர்க்கை அனுமதி சீட்டு கடித நகல் இணைத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வருமான சான்று, ஓய்வூதிய ஆணை ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் அவசியம் விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தாங்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண் டும். கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் விவரங்களை   லீttஜீ://னீணீமீயீ.ஸீவீநீ.வீஸீ   என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். 
மேலும், பள்ளி தலைமை ஆசிரியர், தாளாளர், தங்கள் கல்வி நிலையத்தில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று, சரிபார்த்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் இட்டு விண்ணப்ப படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக மவுலானா ஆசாத் கல்வி பவுண்டேஷன் செயலாள ருக்கு வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கலெக் டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments: