Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown in ,    




திருப்பூர், :திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரேம்குமார் (16). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், இவர், நேற்று முன்தினம் தனது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள மருந்துகடைக்கு பைக்கிள் சென்றார். 
அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த குமார் மற்றும் அவரது நண்பர்களான அரவிந்த், அருண் ஆகியோர் கடைக்கு வந்த பிரேம்குமாரை கிண்டல் செய்துள்ளனர். 
இதனால் பிரேம்குமார் மற்றும் மூன்று பேருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த குமார், மற்றும் அவரது நண்பர்கள், பிரேம்குமாரின் பைக்கை உருட்டுக்கட்டையால் அடித்து சேதப்படுத்தினர். புகாரின் பேரில், வடக்கு போலீசார், குமார், அரவிந்த், அருண் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: