Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by Unknown in ,    





திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.நாகராஜ்  கூறியது:
  கடந்த 2011-ஆம் ஆண்டு திருப்பூரில் இயங்கி வந்த அனைத்து சாய, சலவைப்பட்டறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டபோது, பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை நடைமுறைப்படுத்த ரூ. 200 கோடி வட்டியில்லா கடனாக வழங்கி மீண்டும் திருப்பூரில் சாய, சலவைப்பட்டறைகளை திறக்க உதவிய முன்னாள் தமிழக முதல்வர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, உடனடியாக விடுதலை செய்யக்கோரி, புதன்கிழமை அனைத்து சாயத் தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர், காதர்பேட்டை இரண்டாம் தர பனியன் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்படுகின்றன. இது குறித்து அச்சங்கத்தின் துணைத் தலைவர்கள் குமார், நாகராஜ் ஆகியோர் கூறியது:
  பனியன் தொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி,  திருப்பூர், காதர்பேட்டையில் உள்ள செகண்ட்ஸ் பனியன் வியாபாரிகள் புதன்கிழமை ஒருநாள் தங்கள் கடையடைப்பில் ஈடுபட உள்ளனர்.

0 comments: