Thursday, October 16, 2014
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள்
வழங்கப்பட்டன.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில்
ஞாயிறன்று
நடைபெற்ற இந்த விழாவுக்கு அறக்கட்டளை நிர்வாகி அரிமா மு.ஜீவானந்தம் தலைமை ஏற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் வரவேற்றார்.
இதில் கவிதைப் பிரிவில் சாத்தான்களின் அந்தப்புரம் என்ற நூலுக்கு நறுமுகை தேவி முதல் பரிசும், பிரியங்களின் அந்தாதி என்ற நூலுக்கு இவள் பாரதி சிறப்புப் பரிசும், பறையொலி நூலுக்கு தனலட்சுமி பாஸ்கரன் பாராட்டுப் பரிசும் பெற்றனர். முதல் தொகுப்பிற்கான பரிசை இலைகள் பழுக்காத உலகம் நூலுக்கு ராமலட்சுமி பெற்றார்.
நாவல் பிரிவில் கால்புழுதி நூலுக்கு கனக தூரிகா முதல் பரிசு பெற்றார். திரிந்தலையும் திணைகள் நூலுக்கு ஜெயந்தி சங்கர் சிறப்புப் பரிசும், அஞ்சாங்கல் காலம் நூலுக்கு உமா மகேசுவரியும், ஐயாரப்பன் வீடு நூலுக்கு மைதிலி சம்பத் ஆகியோருக்கு பாராட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மொழிபெயர்ப்பு துறையில் மூடுபனிச்சிறையில் வண்ணங்கள் என்ற இந்தி மூலத்தை தமிழில் மொழி பெயர்த்த முனைவர் வி.பத்மாவதி முதல் பரிசு பெற்றார். ஹிமாலயம் மலையாள நூலை தமிழ் மொழி பெயர்த்த கே.விஜெயஸ்ரீக்கு சிறப்புப் பரிசும், அம்மா என்ற இந்தி மூலத்தை தமிழாக்கம் செய்த ராஜேஸ்வரி கோதண்டம் பாராட்டுப் பரிசும் பெற்றனர்.
சிறுகதைத் துறையில் பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் நூலுக்கு அ.வெண்ணிலா முதல் பரிசும், பெண் வழிபாடு நூலுக்கு புதிய மாதவி சிறப்புப் பரிசும், ஜெயந்தி சங்கர் கதைகளுக்கு ஜெயந்தி சங்கர் பாராட்டுப் பரிசும் பெற்றனர். இத்துடன் முதல் முயற்சிக்கான பரிசுகள் கிராமத்து ராட்டினம் நூலுக்கு ஜி.மீனாட்சியும், ஆத்மாவின் கோலங்கள் நூலுக்கு ஜெயஸ்ரீ சங்கரும் பரிசு பெற்றனர்.
கட்டுரைப் பிரிவில் கரிகால் சோழன் நூலுக்கு நிரஞ்சனாதேவி முதல் பரிசும், தமிழக சிற்பங்களின் பெண் தொன்மம் நூலுக்கு முனைவர் நிர்மலா சிறப்புப் பரிசும், நகரத்தின் கதை நூலுக்கு சித்ரா ரமேஷ் பாராட்டுப் பரிசும், சிச்சுப்புறா நூலுக்கு செல்வி சுகானா வளர் எழுத்தாளரு்ககான ஊக்கப் பரிசும் பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...




0 comments:
Post a Comment