Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
காஞ்சீபுரம் அருகே பஸ்– லாரி மோதிய விபத்தில் 22 பேர் காயம் அடைந்தனர்
காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூர் அருகே உள்ள கணபதிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 40 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் நிறுவனத்தின் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை கணபதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார்.
காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரை–வேடல் கிராமத்துக்கு அருகே அந்த தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்னையில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியது.
இதில் பஸ் டிரைவர் மணிகண்டன், சாலையை கடக்க முயன்ற வேடல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 55) இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த தொழிலாளர்கள் நாகேந்திரன், சொக்கலிங்கம், அருள், சீனிவாசன், உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மாதவன், சப்–இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சிவக்குமார், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தொழிற்சாலை நிர்வாகத்தினர் காயம் அடைந்தவர்களை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
படுகாயம் அடைந்த பஸ் டிரைவர் மணிகண்டன், ஏழுமலை ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

0 comments: