Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா பள்ளியகரம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன்(52). இவரது நண்பர் பள்ளியகரம் கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரது மனைவி சபியா சுல்தானா.
இவர்கள் தங்களது விவசாய நிலங்களை கோதண்டன் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுக்கும்படி குமாரவாடி கிராம நிர்வாக அலுவலர் கோ.தேவேந்திரனிடம் விண்ணப்பித்தனர்.அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். அதன்பின்பு ரூ.4 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. லஞ்ச பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட கோதண்டன் இதுகுறித்து காஞ்சீபுரம் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
பின்னர் நேற்று கோதண்டன் தேவேந்திரனிடம் ரூ. 4ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஊழல் தடுப்பு போலீசார் தேவேந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

0 comments: