Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
மார்த்தாண்டம் கொடுங்குளத்தில் விஷ பிராணிகளின் புகலிடமாக மாறி வரும் குளத்தை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மார்த்தாண்டம், கொடுங் குளத்தில் கொல்லக்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள்  உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த குளத்தில் குளித்து வந்தனர். மேலும், இந்த குளத்தில் உள்ள தண்ணீரை விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.  நாளடைவில் மார்த் தாண்டம் சந்திப்பு பகுதியில் உள்ள சாக்கடை நீர் இந்த குளத்தில் தேங்க தொடங்கியது. அதன்பின்பு,  இந்த குளத்து தண்ணீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவு துர்நாற்றம் வீசத்தொடங் கியது. இதனால், குடியிருப் புகள் மத்தியில் அமைந்திருந் தாலும், குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத் துவதை நிறுத்தினர். அதன்பின்பு, இந்த குளத்தில் புல் பூண்டுகள்  வளர தொடங்கின.  ஆரம்ப நிலையிலேயே புல்பூண்டுகளை அகற்றி குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், குளத்தில் ஏராளமான புல்பூண்டுகள் வளர்ந்து புதர்காடாக மாறத்தொடங்கியது. 
தற்போது இந்த புதர்களில் பாம்பு போன்ற பல்வேறு விஷ பிராணிகள் வசித்து வருகின் றன. மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப் பட்ட நிர்வாகத்தினர் இந்த குளத்தை சீரமைத்து, இதில் தேங்கும் நீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும்,  விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: