Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் தெருநாய் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் ஏராளமான வணிக நிறுவ னங்கள், தினசரி சந்தை, பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், அரசு– தனியார் அலுவலகங்கள், வங்கிகள் போன்றவை உள்ளன. இதனால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் அரசு மற்றும் தனியார் வாகனங் களில் மார்த்தாண்டம் வந்து செல்கிறார்கள். எனவே, மார்த்தாண்டம் நகரில் எப்போதும், வாகன நெருக் கடியும், பொதுமக்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும்.மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டமும், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது, பஸ் நிலையத்தில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை பல நேரங்களில்   பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளை பார்த்து குரைப்பது, கடிக்க துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. மேலும், நாய்கள் தங்களுக்குள் சண்டை போட்டு வாகனங்களின் குறுக்காகவும், பயணிகள் மத்தியிலும் தாறுமாறாக ஓடுகின்றன. இதனால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் அஞ்சி ஓடுகிறார்கள். மேலும், தாறுமாறாக ஓடும் நாய்கூட்டம் பல வேளைகளில் வாகனங்களின் குறுக்காக பாய்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போடும் போது விபத்துகள் நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பஸ் நிலையத்தில் சுற்றி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: