Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
குலசேகரம் அருகே ரப்பர் தோட்டத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.குலசேகரம் அருகே திருவரம்பு, குருவிகோடு பகுதியை சேர்ந்தவர் சுசீலா (வயது48). தோட்ட தொழிலாளி. இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவருக்கு இரண்டு மகள்கள்  உண்டு. இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். சுசீலா அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, 2 வாலிபர்கள் அங்கு வந்தனர்.அவர்கள் சுசீலாவின் அருகில் சென்று தங்களின் ஆசைக்கு இணங்கும்படி கூறி சில்மிஷம் செய்ததாக கூறப் படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுசீலா அலறினார்.அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழி லாளர்கள் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடினர்.இதுகுறித்து சுசீலா குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் அரமன்னம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சந்தோஷ் (19), பிரசாந்த் (21) ஆகியோர் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறியுள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார், வாலிபர்கள் இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர். பிரசாந்தை போலீசார் தேடி வருகி றார்கள்.

0 comments: