Sunday, October 19, 2014

On Sunday, October 19, 2014 by farook press in ,    
சிக்மகளூர் மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஒரு அரசியல் பிரமுகரின் மகளின் ஆபாச படம் ஒன்று செல்போன்களில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக என்.ஆர்.புராவை சேர்ந்த அகமத் பாஷா, சிவகுமார், செபாஸ்டின், தஸ்தகீர், கிருஷ்ணா, அசோக், சுஜீத், சந்தோஷ் சர்மா உள்ளிட்ட 8 பேரை என்.ஆர்.புரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் கடந்த 12–10–2012 அன்று ஜாமீனில் வெளியே வந்த 8 பேரும், தங்களது மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று என்.ஆர்.புரா தாசில்தார் மூலமாக ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்தனர்.ஆனால் அதன் பின்னர் அவர்களது கடிதம் தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த 8 பேரும்  சிக்மகளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.பின்னர் அவர்கள் கலெக்டர் சேகரப்பாவிடம் கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–நாங்கள் ஆபாச படங்களை செல்போனில் பகிர்ந்து கொண்டதாக போலீசார் எங்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பொய்யான வழக்கு எனக் கூறியும், இந்த வழக்கில் இருந்து விடுக்கவிக்கவும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினோம். ஆனால் இதுவரை எங்களது கடிதத்திற்கு பதில் கடிதம் வரவில்லை.மேலும் இந்த பொய் வழக்கால் எங்களது 8 பேரின் குடும்பத்தினரும் பெரும் அவமானத்திற்கு உள்ளாகியுள்ளனர். நாங்களும் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே பொய்யாக தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சேகரப்பா, இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஆபாச படங்கள் விற்றதாக கைதான 8 பேரும் கருணை கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கோரி மனு கொடுத்த சம்பவம் சிக்மகளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 comments: