Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
நெகமம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து, அதில் இருந்து கியாஸ் கசிந்த தால் பரபரப்பு ஏற்பட் டது.
திருப்பூர் மாவட்டம் பொங் கலூரில் இருந்து நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியில் உள்ள ஒரு தனியார் கியாஸ் கம்பெனிக்கு கியாஸ் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. லாரியை உத்தர பிரதேசத்தை சேர்ந்த டிரைவர் மனோஜ்குமார் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். லாரியில் 18 டன் கொள்ளளவு கொண்ட கியாஸ் இருந்தது.
மெட்டுவாவி-காவிலி பாளையம் ரோட்டில் லாரி வந்து கொண்டிருந்தது. அப் போது ஒரு வளைவில் திரும் பும் போது, எதிர்பாரத வித மாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதையடுத்து லாரியில் இருந்து கியாஸ் கசிந்து கொண் டிருந் தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நெகமம் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அருகில் இருந்தவர் களை போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் பொள்ளாச்சியில் இருந்து தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். கியாஸ் கசிந்து கொண்டிருந்த தால் தீயணைப்பு படை வீரர்கள் அசம்பாவித சம்பவங் கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர்.
அந்த வழியாக செல்லும் மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் நிறுத்தப்பட்டது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மாற்றுப்பாதை குறுகியதாக இருந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் உள்ள ஆடு, மாடுகள் அங்கிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லப் பட்டது. கியாஸ் கசிந்து கொண்டிருந்ததால், லாரி அருகே யாரும் செல்ல போலீ சார் அனுமதிக்க வில்லை.அதை தொடர்ந்து மற்றொரு லாரி வரவழைக்கப்பட்டு, அதில் கியாஸ் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பொக்லின் எந்திரம் மூலம் லாரியை மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

0 comments: